கரூரில் இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
கரூர்: இலங்கையில் நடந்து வரும் இனப்படுகொலையைக் கண்டித்து கரூர் அருகே உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகள் இன்று உண்ணாவிரதம் இருந்தனர்.
கரூர் மாவட்டம் ராயனூரில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. அங்கு தங்கியிருக்கும் அகதிகள், இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்தும், அதைத் தடுத்து நிறுத்தக்கோரியும் இன்று ஒரு நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
இந்திய அரசு இலங்கை விவகாரத்தில் தலையிட்டு தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டும். தமிழ்ச் சகோதர, சகோதரிகளின் உயிருக்கும், உடமைக்கும், கற்புக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications