மதுரை-சு.சுவாமி அலுவலகம் மீது தாக்குதல்-சூறை

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், அவைத் தலைவர் கண்ணப்பனும் நேற்று கைது செய்யப்பட்டனர். பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த கைது நடவடிக்கையை சுப்ரமணியம் சுவாமி வரவேற்று அறிக்கை விட்டிருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் மதுரை பிபி குளம் பகுதியில் உள்ள ஜனதாக் கட்சி அலுவலகத்தை 25 பேர் கொண்ட புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்களும், வக்கீல்கள் குழுவும் தாக்கி சூறையாடியது.
அங்கிருந்த பொருட்களை அக்கும்பல் அடித்து நொறுக்கிய அவர்கள் கற்களை வீசி கண்கணாடி ஜன்னல்களை உடைத்தனர். பின்னர் அலுவலகத்தில் இருந்த உறுப்பினர் பாரங்களை எடுத்து கிழித்தெறிந்தனர்.
அலுவலகத்தில் இருந்த டியூப்லைட்டுகள், நாற்காலிகள், மேசைகள் ஆகியவற்றையும் அடித்து சேதப்படுத்தினர்.
கட்சி அலுவலகத்திற்கு வெளியே இருந்த கொடிக் கம்பத்தையும் கஷ்டப்பட்டு பிடுங்கி எறிந்தனர்.
அந்த சமயத்தில் அலுவலகத்தில் இருந்த மாவட்டத் தலைவர் புருஷோத்தமனும் தாக்கப்பட்டார். பின்னர் அக்கும்பல் அங்கிருந்து சென்றது.
இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications