அரிசி ஆலையில் 7 கொத்தடிமைகள் மீட்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு அரிசி ஆலையில் கொத்தடிமைகளாக இருந்த 2 குடும்பகங்களை அதிகாரிகள் மீட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மானாமதி அடுத்த ஆமூர் என்ற கிராமத்தில் லட்சுமி நாராயண ரெட்டி என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலை உள்ளது. இதில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பத்தினர் கொத்தடிமைகளாக இருப்பதாக செங்கல்பட்டு தனி துணை வட்டாட்சியர் மரியாதாஸூக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மரியதாஸ், வருவாய்த்துறை அலுவலர் மற்றும் போலீஸார் அந்த அரிசி ஆலையில் சோதனை செய்தனர். அப்போது புன்னப்பட்டு மற்றும் தீதானம் கிராமத்தைச் சேர்ந்த இருளர் குடும்பத்தினர் கொத்தடிமைகளாக இருந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக அரிசி ஆலை உரிமையாளர் லட்சுமி நாராயண ரெட்டி, அவரது மகள் தேவி ஆகியோர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அரிசி ஆலையில் இருந்து புன்னப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பையன் (32), அவரது மனைவி லலிதா (27), மகள் பிரியா (16), மகன்கள் வேலு (9), பிரசாந்த் (8) மற்றும் தீதானம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா (41), அவரது மனைவி நாகம்மாள் (31) ஆகியோரை மீட்கப்பட்டனர். பின்னர் அவர்களை தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications