பிரதமரின் செளதி-கத்தார் பயணம் ரத்து: யுஎஸ் போகிறார்
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்கின் சவூதி அரேபியா மற்றும் கத்தார் பயணம் ரத்து செய்யப்படவுள்ளது. அதற்குப்பதிலாக அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜி -20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் அமெரிக்கா செல்லவுள்ளார்.
நவம்பர் 8ம் தேதி முதல் ரியாத் மற்றும் கத்தாரில் சுற்றுப்பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தார் பிரதமர். தற்போது அந்தப் பயணம் ரத்தாகியுள்ளது. அதற்குப் பதிலாக நவம்பர் 15ம் தேதி வாஷிங்டனில் நடைபெறவுள்ள ஜி -20 மாநாட்டில் பிரதமர் பங்கேற்கவுள்ளார்.
சவூதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் அல் சாத், நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. மாநாட்டுக்குப் போகவுள்ளதால், பிரதமரின் பயணத்தை முன் கூட்டியே மேற்கொள்ள முடியுமா என்று சவூதி அரசு கேட்டிருந்தது. ஆனால் பயணத்தை மாற்றியமைக்க விரும்பாத இந்திய அரசு தற்போது பிரதமரின் சவூதி பயணத்தையே ரத்து செய்ய முடிவுசெய்து விட்டது.
அதற்குப் பதிலாக வாஷிங்டனில் நவம்பர் 15ம் தேதி நடைபெறவுள்ள ஜி - 20 மாநாட்டில் பிரதமர் பங்கேற்பார் எனத் தெரிகிறது. அப்போது அவர் அதிபர் புஷ்ஷையும்அவர் சந்திப்பார் எனத் தெரிகிறது.
கடந்த இரண்டு மாதங்களில் புஷ்ஷை அவர் சந்திக்கவிருப்பது இது இரண்டாவது முறையாகும்.
உலக பொருளாதார நெருக்கடி குறித்து ஜி -20 மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.
-
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
"AI மனித கட்டுப்பாட்டை மீறும்.." அடுத்து என்ன நடக்கும் தெரியுமா? AI நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை -
மிக பெரிய ஆபத்தில் சீனா.. இனி என்ன செய்தாலும் ஒன்னுமே மாறாது.. ஆனா இந்தியாவுக்கு பயங்கர லாபம்! -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications