கிளிநொச்சி மருத்துவமனை மீது குண்டு வீச்சு- நோயாளிகள் ஓட்டம்
கொழும்பு: கிளிநொச்சியைப் பிடிக்க தீவிரமாக உள்ள ராணுவம், அங்கு சரமாரித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள அரசு பொது மருத்துவமனை மீது இலங்கை ராணுவம் ராக்கெட் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து அங்கிருந்த நோயாளிகள் பீதியடைந்து வெளியேறினர்.
கிளிநொச்சியைப் பிடிக்க ராணுவம் தீவிரவாத் தாக்குதலில் இறங்கியுள்ளது. இதில் இரு தரப்புக்கும் இடையில் சிக்கிக் கொண்டு அப்பாவித் தமிழர்கள் 2 லட்சம் பேர் பரிதவித்து வருகின்றனர். பல அப்பாவித் தமிழர்களும் இந்த சண்டையில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.
கிளிநொச்சிைய நெருங்கிக் கொண்டிருக்கும் இலங்கை ராணுவம், புலிகள் வசம் இருந்தசில முக்கிய பகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், மன்னியங்குளம் அருகே 4 கிலோமீட்டர் அளவிலான பகுதியை கைப்பற்றியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
அங்கு விடுதலைப் புலிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
அக்கராயன் குளம் ஏரிக்கரையின் கிழக்கு பகுதியில் இருந்து மன்னியங்குளம், தெருமுருக்கண்டை சாலை ஆகிய பகுதிகளுக்கு வடக்கே சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ராணுவத் துருப்புகள் முன்னேறி இருப்பதாகவும், அப்பகுதியில் பதுங்கி இருக்கும் புலிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும் ராணுவம் கூறியுள்ளது.
மருத்துவமனை மீது குண்டு வீச்சு:
இந்த நிலையில், கிளிநொக்கியில் உள்ள பொது மருத்துவமனை மீது சிங்கள ராணுவம் ராக்கெட் தாக்குதல் நடத்தியது. ராக்கெட் தாக்குதல் மற்றும் குண்டு வீச்சில் அந்த மருத்துவமனை இடிந்தது.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதேபோல, அம்பாறை மாவட்டத்தில் ராணுவத்துக்கும், விடு தலைப்புலிகளுக்கும் கடும் போர் நடைபெற்று வருகிறது. கடந்த 75 நாட்களாக இங்கு நடைபெற்று போரில் சிங்கள படையினர் 65 பேர் கொல்லப்பட்டனர். 98 பேர் காயம் அடைந்தனர் என்று விடுதலைப்புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications