ராஜபக்சேவின் மைத்துனர் பாபநாசம் விஜயம்
பாபநாசம்: இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் தங்கை கணவர் திருக்குமார் நடேசன் பாபநாசம் அருகே உள்ள அகஸ்தியர் மலைக்கு வருகை தந்தார். தமிழர்களுக்கு எதிராக அவர் பூஜை செய்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தங்கை நிருபமா பக்சே. இவரது கணவர் எம்பி திருக்குமார் நடேசன். நேற்று காலை பாபநாசம் வந்த இவர் அகஸ்தியர் அருவி அருகேயுள்ள அகஸ்தியர் கோயிலில் வழிபட்டார். அதன்பின்னர் அங்குள்ள முருகன் சன்னதியில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் அவர் கலந்து கொண்டார்.
அவருடன் இலங்கை ழிலாளர் காங்கிரஸ் தலைவர் மணிமுத்து, சிலோன் இன்டர்நேஷனல் வங்கி மேலாளர் ராகவன் உள்பட 25 பேர் வந்திருந்தனர்.
தமிழர்களுக்கு எதிராக பூஜை - யாகம்?
தரிசனத்தை முடித்து விட்டு திருக்குமார் நடேசன் நிருபர்களிடம் கூறியதாவது, நான் கடந்த 20 ஆண்டுகளாக கந்த சஷ்டி விழாவுக்கு திருச்செந்தூருக்கு வந்து செல்கிறேன். அப்படி வரும் போதுதெல்லாம் பாபநாசம் அகஸ்தியர் கோயிலுக்கும் வருவது வழக்கம். அதே நோக்கத்தில்தான் இங்கு வந்துள்ளேன்.
இங்கே நான் யாகம் எதுவும் நடத்தவில்லை. நான் நடத்தியது கந்த சஷ்டி விரதத்துக்கான பூஜை மட்டும்தான்.
நாங்கள் இலங்கை தமிழர்களுக்கு எதிராக பூஜைகள் நடத்த வருவதாக சொல்லப்படுவது தவறு. இது மிகுந்த வேதனை அளிக்கின்றது.
தமிழக கடவுளாகிய முருகன் கோயிலில்தான் இந்த பூஜை நடத்துகிறோம். அப்படி இருக்கையில் தமிழர்களுக்கு எதிராக தமிழக கடவுளிடமே வேண்ட முடியுமா... எனக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. கந்த சஷ்டி பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டதால்தான் 14 ஆண்டுகளுக்கு பிறகு எனக்கு 2 குழந்தைகள் பிறந்தன.
இந்தியா ஒரு ஆன்மீக பூமி. அதனால்தான் நான் இங்கே அடிக்கடி வருகிறேன் என்றார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications