ஈழத் தமிழர்களுக்கு உயிரும் தருவோம்-கருணாநிதி

முரசொலியில் அவர் எழுதியுள்ள கவிதையில்,
இலங்கைப் போரிலே செத்து மடியும் தமிழரெல்லாம் இந்தியா கை கொடுக்கும் என்று நம்பித் தான் இமை மூடுகின்றார்.
உதவிக்கு நமை நாடுகின்ற அவர் தம் இல்லங்களில் உதிர்ந்து விட்ட இலைகளுக்குப் பின் இருக்கின்ற அரும்புகளைக்
கருகாமல் காய்ந்திடாமல் காத்து வளர்த்து காலத் தருவாய் இருந்த தமிழினமே தரை மட்டமானது எனும் வரலாறுக்கு இங்குள்ள தமிழர் வழித் தோன்றல்களாகி விடாமல்;
வளர் பிறைகள் தேய்பிறைகளாகி நிரந்தர அமாவாசை நிலைத்துவிடாமல்
இடர் களைந்து இன்றே இலங்கைத் தமிழர்தம் உயிர் காத்து இனம் காத்தோம் எனும் பெருமூச்செறிந்திட வழி கண்டு
இங்குள்ள நல்லோர் தரும் நன்கொடையாம் பரிவுத் தொகைகளை "இதயமுள்ளோர் வாழ்க'' என்று இனிய நன்றி கூறிப் பெற்றுக் கொண்டு
அவற்றையெல்லாம் பண்டங்களாக்கி உணவு உடை பொருள்களாக்கி அங்குள்ள உரியவர்க்குப் போய்க் கிட்டிட உகந்த வழி உடனே கண்டு
சர்வ தேச அமைப்புகள் மூலமாக அனுப்பி வைக்கவிருக்கின்றோம்-
அது போய்ச் சேராது என்றும் அது ஓர் நாடகமென்றும் அவசரக்கார தம்பி ஒருவரும் அவையெலாம் வீணாக விடுதலைப் புலிகட்கே பயன்படுமென்று அம்மையார் ஒருவரும்
அதனால் நிதி கொடுக்காதீர்- இலங்கைத் தமிழரை வாழ வைக்காதீர் என்று வெறிக் கூச்சல் போடுகின்றார்- அவற்றை நாம் பொருட்படுத்தாமல்
வெற்றுக் கூச்சல் என்றே எண்ணிக்கொண்டு இன்னும் வேகமாக வெந்தணலில் கிடக்கின்ற ஈழத் தமிழருக்கு இதயத்தைத் தந்திடுவோம்- தேவையெனில் இன்னுயிரையும் வழங்கிடுவோம்!
இவ்வாறு தனது கவிதையில் கூறியுள்ளார் கருணாநிதி.
ஈழ தமிழர் நிதிக்கு பர்னாலா 1 மாத சம்பளம்:
இந் நிலையில் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ இலங்கை தமிழர் நிவாரண நிதிக்கு தனது 1 மாத ஊதியத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா.
ரூ. 4.89 கோடி குவிந்தது:
இதற்கிடையே இன்று தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் ராம நாராயணன் ரூ. 11 லட்சமும், ஜெம் கிராணைட்ஸ் அதிபர் வீரமணி ரூ. 5 லட்சமும், தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் ரூ. 2.5 லட்சமும், நடிகர் வடிவேலு ரூ. 2 லட்சமும் முதல்வரை நேரில் சந்தித்து வழங்கினர்.
இதன்மூலம் இந்த நிவாரண நிதிக்கு இன்று வரை ரூ. 4.89 கோடி குவிந்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications