காவிரி- கட்டளை- குண்டாறு நதிகளை இணைக்க ரூ.169 திட்டம்
சென்னை: தமிழக நதிகளை இணைக்கும் திட்டத்தின் முதல்படியாக காவிரி- கட்டளை- குண்டாறு நதிகளை இணைக்க ரூ. 169 கோடியில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் விடுவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது என பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், கடந்த ஆட்சியில் கருணை அடிப்படையில் பணி நியமனத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பின் பொதுப்பணித் துறையில் காலியாக இருந்த இடங்களுக்கு கடந்த ஆண்டு 57 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இன்று 156 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்களின் இன்னல்களை நீக்க பொதுப்பணித் துறையினர் தங்களது ஒரு நாள் சம்பளத்தை வழங்கி உதவ வேண்டும்.
மாநிலத்தில் உள்ள நதிகளை மூன்று கட்டங்களாக இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
காவிரி- கட்டளை- குண்டாறு இணைப்புத் திட்டம் ரூ. 169 கோடி யில்நிறைவேற்றப்படும். இதற்கான டெண்டர் விடுவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.
அடுத்ததாக தாமிரபரணி- கருமேணியாறு இணைப்புத் திட்டத்தை ரூ. 369 கோடி ரூபாயில் நிறைவேற்றவுள்ளோம்.
இதைத் தொடர்ந்து தென்பெண்ணை- செய்யாறு இணைப்புத் திட்டம் எடுத்துக் கொள்ளப்படும்.
முல்லைப் பெரியாறு அணை பலமாக இருப்பதாக மத்திய அரசின் குழு அறிக்கை அளித்து, அதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், கேரள அரசு மட்டும் அந்த அணை பலமில்லை என்று கூறி, தீர்ப்பை மறுபரிசீலனை செய்யச் சொல்கிறது. அதற்கு அவசியமே இல்லை என மத்திய அரசும் தெரிவித்துள்ளது.
கேரளாவின் இந்தப் போக்கு, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு அந்த அரசு மதிப்பளிக்கவில்லை என்பதைத் தான் காட்டுகிறது என்றார் துரைமுருகன்.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications