'சுருதி பேதம்'.. ராமதாசுக்கு வீரமணி கண்டனம்
சென்னை: ஈழத் தமிழர்கள் பாதுகாப்பு தொடர்பாக தமிழக அரசு கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டம் தோல்வியடைந்து விட்டதாக கூறியுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை மறைமுகமாகத் தாக்கியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு பிறகு மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி பல நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளது.
இந் நிலையில் இது தோல்வி, அது தோல்வி என்று கூறி சுருதி பேதம் காட்டுவதும், முன்னெடுத்து செல்ல வேண்டிய முயற்சிகளை குலைக்கும் வகையில் அரசியல் பார்வைக்கு இடம் தருவதும் சரியல்ல.
ஈழத் தமிழர்களுக்காக அரசு திரட்டும் நிதி ஈழத் தமிழர் என்ற போர்வையில் விடுதலைப் புலிகளுக்குத்தான் பயன்படும் என்று கூறியுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு கடும் கண்டனத்திற்குரியது.
தமிழின விரோதியாக தன்னை காட்டிக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவுடன் சிலர் கூட்டு சேருவதற்கு துடியாய் துடிப்பது வேதனைக்குரியது என்று கூறியுள்ளார் வீரமணி.












Click it and Unblock the Notifications