சட்டசபையில் திமுகவுக்கு நெருக்கடி-காங். திட்டம்!
சென்னை: தமிழக சட்டசபை 10ம் தேதி கூடவுள்ள நிலையில் வரும் 6ம் தேதி காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ்- திமுக இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் சட்டசபையில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து இதில் முடிவெடுக்கப்படவுள்ளது.
இலங்கை பிரச்சனை, புலிகள் விவகாரத்தில் திமுகவையும் முதல்வரையும் கடுமையாகத் தாக்கி வருகின்றனர் ஞானசேகரன் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்.
இந்த பிரச்சனையில் மத்திய அரசுக்கு தந்த நெருக்கடியை திமுக குறைத்துக் கொண்டுவிட்டாலும் கூட திமுக மீதான தாக்குதலை மூத்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர்ந்து வருவதோடு, அதிமுகவையும் அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவையும் பாராட்டி வருகின்றனர்.
வழக்கமாக தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கூடும் போது அந்றைய தினம் காலையில் தான் எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
இந் நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் நெருக்குதலால் 4 நாட்களுக்கு முன்பே கூட்டத்தைக் கூட்டியுள்ளார் சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவரான சுதர்சனம்.
மேலிட பொறுப்பாளர்களும் பங்கேற்பு:
இந்த் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்களும் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக இந்தக் கூட்டங்களில் அவர்கள் கலந்து கொள்வதில்லை.
ஆனால், இதில் தமிழக காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளரும், மத்திய அமைச்சருமான வயலார் ரவி, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் அருண்குமார், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்கின்றனர். இதில் அருண்குமார் தீவிரமான அதிமுக ஆதரவாளராவார்.
இதனால் திமுகவுக்கு நெருக்கடி கொடுப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. குறிப்பாக இலங்கை, புலிகள் விவகாரத்தில் திமுகவுக்கு காங்கிரஸ் பெரும் சங்கடம் தரலாம்.
மேலும் ஆட்சியில் பங்கு கோருவதோடு, வாரியங்களில் தலைவர் பதவிகளையும் கோரவும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குரல் எழுப்பலாம் எனத் தெரிகிறது.
இனியும் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதில்லை என்ற நிலையை எடுக்க பல காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூறி வருவதால் இந்தக் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
6ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications