பஸ்சில் ஆசிரியையை கொலை செய்த கணவர்
செஞ்சி: செஞ்சி பஸ் நிலையத்தில் பஸ்சில் அமர்ந்திருந்த அரசுப் பள்ளி ஆசிரியை அவரது கணவர் கத்தியால் குத்திக் கொலை செய்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அருள்நாட்டை சேர்ந்தவர் சாமுவேல் சவுரிராஜன் (45). இவரது மனைவி அகஸ்டின் குணவதி (27) உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் ஊராட்சி தொடக்கப்பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று காலை குணவதி உளுந்தூர்பேட்டை செல்லும் தனியார் பஸ்சில் அமர்ந்தார். அப்போது பஸ்சில் ஏறிய குணவதியின் கணவர் சாமுவேல் திடீரென மனைவியை கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டு தப்பி ஓடினார்.
பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை பஸ் டிரைவர் செஞ்சி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால் குணவதி வழியிலேயே இறந்தார்.
இந் நிலையில் சாமுவேல் செஞ்சி காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீசாரிடம் அவர் கூறுகையில்,
எனது மாமா மகளான குணவதியை 8 ஆண்டுகளாக காதலித்து அவரது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டேன்.
திருமணத்துக்கு பின் நாங்கள் சென்னை பரங்கிமலையில் குடியேறினோம். நான் லாரி டிரைவராக வேலை பார்த்தேன். எங்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந் நிலையில் குணவதிக்கு உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூரில் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைத்தது. இதனால் ஆசனூருக்கு குடி வந்தோம்.
நான் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தேன். நான் காலையில் வேலைக்கு சென்றால் இரவில் தான் வீட்டுக்கு வருவேன்.
குணவதி பணியாற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் லெனின் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வதாகவும், குணவதிக்கும் அவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாகவும் தெரிய வந்தது.
இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. துரோகம் செய்த குணவதியை பழிவாங்கவே அவரை கத்தியால் குத்தி கொன்றேன் என்று கூறியுள்ளார்
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications