விண்ணைத் தொடும் காய்கறி விலை!
சென்னை: சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் காய்கறி விலை எந்த ஆண்டும் இல்லாத வகையில் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. அனைத்துக் காய்கறிகளின் விலையும் 3 முதல் 5 மடங்கு வரை உயர்ந்துள்ளது.
அண்டை மாநிலங்களிலும் தமிழகத்திலும் சமீபத்தில் பெய்த கடும் மழையால் காய்கறி தோட்டஙகள் பாதிப்புக்குள்ளானதால் கடும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் கத்தரிக்காய், வெண்டைக்காய் விலையும் அதிகரித்து விட்டது. கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.20க்கும், விதை இல்லாத வெள்ளை கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.30க்கும் விற்பனை ஆகிறது.
கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் அவரைக் காய் ஒரு கிலோ ரூ.45க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.15க்கும், கேரட் ஒரு கிலோ 30க்கும், பீன்ஸ் ஒரு கிலோ ரூ.25க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.25க்கும்,
பாகற்காய் ஒரு கிலோ ரூ.20க்கும், பீட்ரூட் ஒரு கிலோ ரூ.15க்கும், மிளகாய் ஒரு கிலோ ரூ.15க்கும் விற்பனை ஆகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியை சுற்றி உள்ள கடைகளில் காய்கறிகளை இடத்திற்கு தகுந்தாற்போல விற்பனை செய்து வருகிறார்கள். சில்லரை காய்கறி கடைகளில் பீன்ஸ், அவரைக்காய், கேரட், கத்தரிக்காய், பாகற்காய் போன்ற காய்கறிகள் கிலோ ரூ.25க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி ரூ.45:
கடந்த 2 நாட்களாக சற்று விலை குறைவதுபோல் காணப்பட்ட தக்காளி விலை நேற்று கிலோவுக்கு ரூ.5 கூடிவிட்டது.
பெங்களூர் தக்காளி ஒரு கிலோ ரூ.45க்கும், நாட்டு தக்காளி ஒரு கிலோ ரூ.50க்கும் விற்கப்படுகிறது.
சென்னை நகர மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கு ஒரு நாளைக்கு 700 முதல் 1000 லாரிகள் காய்கறி தேவைப்படுகிறது. ஆனால் தற்போது கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கடந்த சில நாட்களாக 250 லாரிகளில் மட்டுமே காய்கறிகள் வருகின்றன.
மழையின் காரணமாக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் காய்கறி தோட்டங்ககள் அழிந்து சேதம் அடைந்துவிட்டன. எனவே கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மிகக் குறைந்த அளவில் காய்கறிகள் வருகிறது.
இதுதான் விலை ஏற்றத்துக்குக் காரணம் என்றும், அடுத்த மாதம் (டிசம்பர்) வரை காய்கறி விலை குறைய வாய்ப்பு இல்லை என்றும் காய்கறி மொத்த வியாபாரிகள் கூறுகின்றனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications