ஒபாமாவுக்கு கிடைத்த 60% இந்தியர்கள் வாக்கு!

அமெரிக்காவில் வசிக்கும் கோவையைச் சேர்ந்தவரான கார்த்திக் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு நடத்திய ஏசியன் அமெரிக்கன் சர்வேயில் இது தெரியவந்துள்ளது. தற்போது கலிபோர்னியா பல்கலைக்கழகத்தி்ல் பேராசிரியராக உள்ளார்.
அமெரிக்க குடியேற்றம், இன, அரசியல் விவகாரங்களில் இவர் ஒரு நிபுணர் ஆவார். இவரது குழுவும் மேலும் 4 பல்கலைக்கழகக் குழுக்களும் இணைந்து இந்த சர்வேவை நடத்தின.
இதில் 50 சதவீதத்துக்கும் அதிகமான ஆசிய அமெரிக்கர்கள் ஒபாமாவுக்கு வாக்களித்தது தெரியவந்துள்ளது. அதிலும் இந்தியர்கள் தான் மிக அதிகபட்சமாக அவருக்கு ஆதரவளித்துள்ளனர்.
தேர்தல் செலவு:
இதற்கிடையே இந்தத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு இரு வேட்பாளர்களும் மிக அதிகபட்சமாக செலவும் செய்துள்ளனர். கிட்டத்தட்ட 5.3 பில்லியன் டாலர் அளவுக்கு தேர்தலுக்காக செலவு செய்யப்பட்டுள்ளது.
அதிலும் ஒபாமா தான் மிக அதிகமாக செலவிட்டுள்ளார்.
இன்டர்நெட் பிரச்சாரம்-விளம்பரம்:
அதே போல இரு தரப்புமே இன்டர்நெட்டை இதுவரை இல்லாத அளவுக்கு பெருமளவில் பயன்படுத்தியுள்ளனர்.
இ-மெயில்கள், சோசியல் நெட்வொர்க் சைட்கள், பேஸ் புக், மெசேஜ் போர்ட், பிளாக்ஸ், வீடியோ, ஆடியோ நெட்டில் இவர்கள் எதையும் விடவில்லை.
அதே போல இன்டர்நெட் தளங்களில் விளம்பரங்கள் செய்யவும் பல மில்லியன் டாலர்களை இருவரும் செலவிட்டுள்ளனர். அதில் ஒபாமா மட்டும் 5.5 மில்லியன் டாலரை செலவிட்டுள்ளார்.
கூகுளுக்கு பெரும் லாபம்:
இதில் 3.3 மில்லியன் டாலர் கூகுளுக்குப் போய்ச் சேர்ந்துள்ளது. ஆட்வேர்ட்ஸ்-ஆட்சென்ஸ் மூலம் இந்தத் தொகையை ஈட்டியுள்ளது கூகுள்.
யாகூவும் மற்ற தளங்களும் மீதித் தொகையை பகிர்ந்துள்ளன.
மெக்கெய்ன் தரப்பு செலவுத் தொகையை வெளியிடவில்லை.
அதே போல ஒபாமாவுடன் ஆரம்பத்தில் மோதிய ஹிலாரி கிளின்டனும் தனது மொத்த பட்ஜெட்டி் 57 சதவீதத்தை, அதாவது 508,000 டாலரை கூகுளில் செலவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications