ஒபாமா மாபெரும் வெற்றி-கருப்பர் இன மக்கள் கண்ணீருடன் கொண்டாட்டம்

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான பராக் ஒபாமா
பெரும்பாலான மாகாணங்களில் வென்றார். இதன்மூலம் செனட் சபையிலும் ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது.
இந்த வெற்றிகள் மூலம் மொத்தமுள்ள 538 புள்ளிகளில் (Electoral College) ஒபாமா 338 புள்ளிகளையும் மெக்கெய்ன் 163 புள்ளிகளையும் வென்றுள்ளனர்.
அதிபராக 270 புள்ளிகள் தான் தேவை என்ற நிலையில் ஒபாமா மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.
நாடு முழுவதும் பதிவான வாக்குகளில் பராக் ஒபாமா 52 சதவீத வாக்குகளை வென்றார்.
குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ஜான் மெக்கெய்ன் 47 சதவீத வாக்குகளைப் பெற்றார்.
இதன் மூலம் நாட்டின் 44வது அதிபராகிறார் ஒபாமா. மேலும் அமெரிக்க அதிபராகும் முதல் கருப்பர் இனத் தலைவர் என்ற பெருமையையும் பெறுகிறார். அமெரிக்காவில் கருப்பர் இனத்தினருக்கு ஓட்டுரிமையே 1964ம் ஆண்டு தான் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மோசமான கொள்கைகளே குடியரசு வேட்பாளர் மெக்கெய்னின் படுதோல்விக்கு காரணமாகக் கருதப்படுகிறது.
தனது சொந்த ஊரான சிகாகோவில் வாக்களித்த ஒபாமா தனது வெற்றியையும் அங்கேயே கொண்டாடினார். அவரது பேச்சைக் கேட்க காகோவின் கிராண்ட் பார்க் பகுதியில் சுமார் 10 லட்சம் மக்கள் திரண்டு பல மணி நேரம் காத்திருந்தனர். பின்னர் அவர்களிடையே ஒபாமா உரையாற்றினார்.
அதே போல அமெரிக்கா முழுவதுமே ஒபாமாவின் வெற்றியைக் கொண்டாட ஆங்காங்கே மக்கள் கூடியுள்ளனர்.
பல இடங்களில் கருப்பர் இன மக்கள் கைகளில் அமெரிக்கக் கொடியை ஏந்தியபடி மகிழ்ச்சியி்ல் கண்ணீர் வடித்தபடி நின்றுள்ளனர்.
1960களுக்குப் பிறகு இந்தத் தேர்தலில் தான் மிக அதிகபட்சமான வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications