நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குளிர்காலத்தை முன்னிட்டுயில் சென்னையிலிருந்து நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோயில் மற்றும் திருச்சிக்கு சிறப்பு ரயில்களை இயக்குகிறது தெற்கு ரயில்வே.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

குளிர்கால, பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் நவம்பர் 8, 10, 15,17, 22, 14, 19, டிசம்பர் 1, 6, 8, 13, 15, 20, 22, 27, 29ம் தேதியும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகி்ன்றன.

இந்த சிறப்பு ரயில் எழும்பூரில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.15 மணிக்கு நாகர்கோவிலைச் சென்றடையும்.

மறுமார்க்கததில் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு வரும் 9, 11, 16, 18, 23, 25, 30, டிசம்பர் 2, 7, 9, 14, 16, 21, 23, 28, 30 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.

எழும்பூர்- நெல்லை, தூத்துக்குடி:

மேலும், சென்னை எழும்பூரிலிருந்து நெல்லைக்கு வரும் 13, 20, 27, டிசம்பர் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் இரவு 8. 25 மணிக்கும்,

நெல்லையில் இருந்து எழும்பூருக்கு 14, 21, 28, டிசம்பர் 5, 12, 19, 26 ஆகிய நாட்களிலும் இந்த ரயில் இயக்கப்படும்.

நாகர்கோவிலில் இருந்து எழும்பூருக்கு 10, 17, 24, டிசம்பர் 1, 8, 15, 22, 29ம் தேதிகளில் இரவு 7.40 மணிக்கும், எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு 11, 18, 25, டிசம்பர் 2, 9, 16, 23, 30ம் தேதிகளில் சிறப்பு ரயில்களும்,

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு 10, 17, 24, டிசம்பர் 1, 8, 15, 22, 29ம் தேதி இரவு 11.45 மணிக்கும், மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து எழும்பூருக்கு 11, 18, 25 தேதிகளில் இரவு 8.45 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, மீளவிட்டான், தூத்துக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.

தூத்துக்குடியில் இருந்து சென்னை வரும் சிறப்பு ரயில் மாம்பலத்தில் கூடுதலாக நின்று செல்லும்.

அதே போல், திருச்சியில் இருந்து சென்னைக்கு 9, 16, 23, 30, டிசம்பர் 7, 14, 21, 28 தேதிகளில் இரவு 8.30 மணிக்கும், சென்னையில் இருந்து திருச்சிக்கு 12, 19, 26, டிசம்பர் 3, 10, 17, 24, 31 தேதிகளில் இரவு 11.45 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இன்று முதல் முன் பதிவு:

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கியது. விறுவிறுப்பான முன் பதிவு நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+