உத்தப்புரத்திற்குள் நுழைய அரசியல்வாதிகளுக்குத் தடை
மதுரை: சர்ச்சைக்குரிய உத்தப்புரம் கிராமத்திற்குள் அரசியல்வாதிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் தலித் சமுதாயத்தினருக்கும், பிள்ளைமார் சமூகத்தினருக்கும் இடையே பூசல் நிலவி வருகிறது. இதுதொடர்பாக தொடர்ந்து மோதல்கள் வெடித்தவண்ணம் உள்ளது.
உத்தப்புரம் அருகே உள்ள இ. கோட்டைப்பட்டியில் சமீபத்தில் பெரும் மோதல் வெடித்து துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில் உத்தப்புரம், கோட்டைப்பட்டி, எழுமலை ஆகிய கிராமங்களுக்குள் அரசியல் கட்சித் தலைவர்களோ, அரசியல்வாதிகளோ நுழையக் கூடாது என போலீஸார் தடை விதித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக சட்டம், ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராஜேந்திரன் கூறுகையில், இந்த கிராமங்களில் இன்னும் ஒரு வாரத்திற்கு போலீஸ் பாதுகாப்பு நீடிக்கும். அதன் பின்னர் ஒரு வாரத்திற்கு நிலைமை கண்காணிக்கப்படும்.
இந்தக் கிராமங்களுக்குள் அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. யாரேனும் செல்ல விரும்பினால், போலீஸாரிடம் முன் கூட்டியே அனுமதி பெற வேண்டும். அந்தக் கோரிக்கையை நிராகரிக்கவோ, அனுமதிக்கவோ போலீஸாருக்கு முழு உரிமை உண்டு.
அரசு பேருந்துகளை சேதப்படுத்தியவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை அரசுப் பேருந்துகள் உள்பட 21 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
தலைவர்களின் சிலைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பது குறித்து பல்வேறு வழிகளை யோசித்து வருகிறோம். இருப்பினும் சிலைகளுக்கு இரும்புக் கூண்டுகளை அமைப்பதற்கு மக்கள் எதி்ர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே மாற்று ஏற்பாடுகள் குறித்து யோசிக்கப்படும் என்றார்.
இதற்கிடையே, தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தைச் சேர்ந்த குழு ஒன்று உத்தப்புரத்திற்கு இன்று வருகை தருகிறது. அவர்களுடன் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்களும் வருகின்றனர்.
இக்குழுவினர் உத்தப்புரம், கோட்டைப்பட்டி, எழுமலை ஆகிய கிராமங்களுக்கு இன்று சென்று விசாரணை மற்றும் ஆய்வு செய்யவுள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications