இலங்கை நிதிக்கு ஷூ பாலீஷ் மூலம் ரூ5540
Subscribe to Oneindia Tamil
நெல்லை: இலங்கை தமிழர்களுக்காக ஷூக்களை பாலீஷ் செய்து ரூ. 5,540 நிதி திரட்டிய இளைஞர் அதை கலெக்டரிடம் அளித்தார்.
இலங்கை தமிழ் மக்களின் மறுவாழ்வுக்காக பாளை புதிய பஸ் ஸ்டாண்டில் கடந்த 31ம் தேதி முதல் 5ம் தேதி வரை தினம் 2 மணி நேரம் வீதம் மொத்தம் 10 மணி நேரம் பயணிகளின் ஷூக்களை பாப்புராஜ் என்பவர் பாலீஷ் செய்தார்.
இதன் மூலம் கிடைத்த ரூ.5,540யை கலெக்டர் பிரகாஷிடம் அவர் அளித்தார். அப்போது சிரஸ்தார் பால் சுப்பையாவும் உடனிருந்தார்.












Click it and Unblock the Notifications