மீரட்டில் வெடிபொருள் வெடித்து 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மீரட்: உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் இன்று பழைய இரும்புக் கடையில் வெடிபொருள் வெடித்ததில 3 பேர் பலியாயினர். மேலும் 2 பேர் காயமடைந்துள்ளனர்.
மாலை 4 மணியளவில் ஹபூர் சாலையில் உள்ள சகீர் நகரில் ஒரு பழைய இரும்புக் கடையில் இநத வெடிப்பு நடந்தது. மேற்கு வங்கம் மற்றும் வங்க தேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் சேரிப் பகுதி இது.
இது தீவிரவாத தாக்குதல் இல்லை என்றும், பழைய இரும்புப் பொருட்கள் விற்கும் கடையில் இருந்த ராணுவத்தின் வெடிக்காத குண்டு வெடித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தப் பகுதிக்கு அருகில் தான் ராணுவ பயிற்சி மையம் உள்ளது. அந்த மையத்திலிருந்து போடப்பட்ட பழைய இரும்புப் பொருட்களி்ல் இந்த குண்டு வந்திருக்கலாம் என்று தெரிகிறது.
முன்னதாக இது குண்டு வெடிப்பு என்ற அச்சம் பரவியது. சம்பவ இடத்துக்கு வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications