நாடாளுமன்றத்திற்கு ஏப்ரலில் தேர்தல்-காங். திட்டம்

லோக்சபாவுக்கு தேர்தல் வரப் போகிறது என்று பல மாதங்களாகவே பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இருப்பினும் எப்போது தேர்தல் வரும் என்பதில் உறுதியான தகவல் இல்லை.
இந் நிலையில் ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தலாம் என சோனியா காந்தி காங்கிரஸ் தலைவர்களிடம் கருத்து தெரிவித்துள்ளாராம்.
இந்தக் கருத்துக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்தலாமா என கடந்த மாதம் காங்கிரஸ் தலைவர்கள் கூடி விவாதித்தனர். ஆனால், இதற்கு திமுக, லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி ஆகியவை ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இந் நிலையில் திடீரென குறுக்கிட்டு விட்ட உலகப் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு ஆகிய காரணங்களால் தேர்தலை தள்ளிப் போட காங்கிரசும் தீர்மானித்தது.
இப்போது ஏப்ரல் மாதம் உகந்ததாக இருக்கும் என்ற கருத்துக்கு காங்கிரஸ் வந்துள்ளது. இதற்கு முதல்வர் கருணாநிதி, லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோரும் சம்மதம் தெரிவித்துவிட்டதாகத் தெரிகிறது.
விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவில் தொடங்கியுள்ள வேலையிழப்பு உள்ளிட்டவை தங்களுக்கு பாதகமாக அமைந்து விடுமோ என்ற கவலையும் காங்கிரஸ் கூட்டணியை ஆட்டி வருகிறது.
தேர்தலுக்குப் பின்னர் தங்களது கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்குமோ தெரியாது என்பதால் முடிந்தவரை ஆட்சியில் நீடிக்க வேண்டும் என கூட்டணிக் கட்சித் தலைவர்களில் பலர் கருதுவதாகத் தெரிகிறது.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications