10ம் தேதி தமிழக சட்டசபை கூடுகிறது
சென்னை: தமிழக சட்டசபையின் மழைக்காலக் கூட்டத் தொடர் வருகிற 10ம் தேதி கூடுகிறது. இக்கூட்டத் தொடரில் 10 சட்ட முன்வடிவுகள் தாக்கல் செய்யப்படவுள்ளன.
சட்டசபை சபாநாயகர் ஆவுடையப்பன் செய்தியாளர்களிடம் இத்தகவலைத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் வருகிற 10ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
திருக்குறள் படித்த பின்னர் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் சோமசுந்தரம், விஜேந்திரய்யா, ஈஸ்வரன், தவசி, தங்கவேலு ஆகியோரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்படும். இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும்.
பின்னர் கேள்வி நேரம் தொடங்கும். பின்னர் தமிழக மதிப்புக் கூட்டு வரி, புறநகர போலீஸ் ஆணையரகம், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும்.
அவை அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் அலுவல் ஆய்வுக் கூட்டம் கூடி கூட்டத் தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார் அவர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் செல்வம் என்கிற செல்வப் பெருந்தகை ராஜினாமா செய்து விட்டாரா என்ற கேள்விக்கு, பத்திரிக்கையி்தான் படித்தேன். இதுவரை ராஜினாமா கடிதம் வரவி்ல்லை என்றார் ஆவுடையப்பன்.
அதிமுக சார்பில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் எதுவும் தரப்படவில்லை என்று தெரிவித்த ஆவுடையப்பன், துணை சபாநாயகரிடமும் அதுபோல எந்தக் கடிதமும் தரப்படவில்லை என்றார்.
சட்டசபையில் 10 உரிமை மீறல் பிரச்சினைகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்த சபாநாயகர், குளிர்காலக் கூட்டத் தொடர் சுமூகமாக இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
பல்வேறு சூடான பிரச்சினைகளுடன் எதிர்க்கட்சிகள் கூட்டத் தொடரை சந்திக்கவுள்ளதால், குளிர்காலக் கூட்டத் தொடரில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications