மதிமுக எம்.எல்.ஏ. இளவரசன் மரணம்
மதுரை: மதுரை திருமங்கலம் தொகுதி சட்டசபை மதிமுக உறுப்பினர் வீர. இளவரசன் இன்று மதுரையில் மரணமடைந்தார்.
மதுரை திருமங்கலம் தொகுதியிலிருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் வீர. இளவரசன். 47 வயதான அவருக்கு சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்த நிலையில் இன்று காலை பத்தரை மணியளவில் வீர. இளவரசன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
கடந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் வைகோ பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டபோது, அவருடன் சேர்த்து கைதானவர் வீர. இளவரசன்.
வைகோ கைதாக காரணமான திருமங்கலம் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவரும் இளவரசன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த வீர. இளவரசனுக்கு மாணிக்கவள்ளி என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.
வைகோவின் மிகவும் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக விளங்கியவர் வீர. இளவரசன். திமுகவிலிருந்து வைகோ பிரிந்து மதிமுகவைத் தொடங்கியபோது வீர. இளவரசன் அதில் இணைந்தார். தொடர்ந்து தீவிரமாக மதிமுகவில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
மதுரை மாவட்டம் பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீர. இளவரசன் 1960ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் தேதி பிறந்தார்.
வீர. இளவரசனின் உடலை இன்று மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் வைகோ மற்றும் மதிமுக தலைவர்கள், தொண்டர்கள் திரளாக சென்று பெற்றுக் கொண்டனர்.
இறுதிச் சடங்குக்காக உடல், பள்ளப்பட்டிக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
3 நாள் துக்கம்:
வீர. இளவரசன் மறைவுக்கு 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும். கட்சிக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் என மதிமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.
-
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications