சென்னை விமான நிலைய பாதுகாப்பில் குறைபாடு: சர்வதேச நிறுவனம்
டெல்லி: சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் சர்வதேச தரத்தில் இல்லை என்று சர்வதேச விமான நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கும் நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் இந்தியப் பிரிவு இயக்குநர் டேணியல் மகூன் கூறுகையில், இந்தியாவின் அனைத்து பெரிய விமான நிலையங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் நான் பார்வையிட்டேன். அதில் சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர இல்லை என்பது தெரிய வந்தது.
மும்பை மற்றும் டெல்லி விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சர்வதேச தரத்துடன் உள்ளன.
உலகில் உள்ள விமான நிலையங்களில் 60 சதவீத பாதுகாப்பு ஏற்பாடுகளை லாக்ஹீட் நிறுவனம்தான் கவனித்து வருகிறது. இந்திய விமான நிலையங்களிலும் எங்களால் சர்வதேச தரத்துடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்க முடியும்.
விமான நிலையங்களில் ஏற்படக் கூடிய ஆபத்துக்கள் மற்றும் பாதுகாப்பு மிரட்டல்களை முன்கூட்டியே கணித்துக் கூறும் திறன் லாக்ஹீட் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கருவிகளிடம் உள்ளது.
பிரச்சினைகளை எளிதில் சரி செய்யக் கூடிய நவீன சாதனங்களும் எங்களிடம் உள்ளன. மேலும் விமானிகளுக்கு உதவக் கூடிய வகையிலான சிறப்பம்சமும் எங்களது நவீன சாதனங்களிடம் உள்ளன.
எரிபொருள் சேமிப்புக்கும் நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். உயர்ந்தபட்ச பாதுகாப்புக்கும் நாங்கள் உத்தரவாதம் தருகிறோம்.
உலகம் முழுவதும் 149 துறைமுகங்கள், 429 விமான நிலையங்களில் எங்களது பாதுகாப்பு தொழில்நுட்பம் அமலில் உள்ளது என்றார் அவர்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications