மதிமுக எம்.எல்.ஏ இளவரசன் மறைவுக்கு கருணாநிதி, ஜெ. இரங்கல்
சென்னை: மதிமுக எம்.எல்.ஏ வீர. இளவரசன் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் கருணாநிதி இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியின் மதிமுக உறுப்பினர் வீர. இளவரசன் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலன் அளிக்காத நிலையில், இயற்கை எய்தினார் என்ற செய்தியினை அறிந்து மிகவும் வருந்துகிறேன். குறைந்த வயதில், அவர் மறைந்து விடுவார் என்று யாருமே எதிர்பார்க்காத நிலையில், இயற்கை அவரை நம்மிடமிருந்து பிரித்து விட்டது.
சட்டமன்த்தில் அவர் சார்ந்திருந்த கட்சியின் சார்பில் வாதாடுகின்ற நேரத்திலும் கண்ணியம் சிறிதும் கெடாத நிலையில், பலமுறை அவர் பேசியதை நான் கேட்டிருக்கிறேன்.
வரும் 10ம் தேதியன்று சட்டமன்றம் கூடுகின்ற நிலையில், இத்தகையதோர் செய்தி உள்ளம் உருக்குகின்ற ஒன்றாகும்.
அவரை இழந்து வாடும் அவரது துணைவியாருக்கும், குழந்தைச் செல்வங்களுக்கும், உறவினர்களுக்கும், அவரது கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஜெயலிதா...
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், வீர. இளவரசன் மாரடைப்பால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் மிகுந்த துயருற்றேன்.
வீர. இளவரசனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன், பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் சந்தானம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இளவரசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications