புலிகள் ஆயுதங்களை கீழே போடும் வரை போரை நிறுத்தம் இல்லை-இலங்கை

போர் நிறுத்தத்தை அறிவித்து தங்களை அவர்களது வலையில் சிக்க வைக்க புலிகள் முயல்வதாகவும் இலங்கை குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து அந் நாட்டு அமைச்சரும் பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளருமான தெகலிய ரம்புகவெல்லா கூறியுள்ளதாவது:
போர் நிறுத்தத்தைப் பொறுத்தவரை புலிகளின் நாடகத்தை இந்த நாட்டு மக்கள் பல முறை பார்த்து சலித்துவிட்டனர். தீவிரவாதத்தைக் கைவிட்டு ஆயுதங்களைக் கீழே போட்டால் மட்டுமே போர் நிறுத்தம் என்பது சாத்தியம்.
இது தொடர்பாக புலிகளி்ன் சதி வலையில் விழுந்து மக்களை கைவிட அதிபர் ராஜபக்சேவின் அரசு தயாராக இல்லை.
ஏகப்பட்ட சிவிலியன்கள் மற்றும் ராணுவத்தினர் தவிர அதிபரின் சகோதரர் கொதபய ராஜபக்சே மற்றும் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவைக் கொல்ல புலிகள் முயன்றதால் தான் இப்போதைய தாக்குதலையே தொடங்கினோம் என்றார்.
முன்னதாக போர் நிறுத்தத்துக்கு தயாராக இருப்பதாக புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நாங்கள் நடத்துவது தற்காப்புத் தாக்குதல் தான், தமிழர்களைக் கொல்வதைத் தடுக்கவே இந்தத் தாக்குதலில் புலிகள் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.
இந் நிலையில் தான் போரை நிறுத்த மாட்டோம் என அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications