'நளினி': சு.சுவாமியின் அப்பீல் மனு விசாரணைக்கு ஏற்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, கடந்த செப்டம்பர் 24ம் தேதி பிறப்பித்த உத்தரவில், மாநில அரசு நளினியின் கோரிக்கையைப் பரிசீலிக்க புதிய சிறை ஆலோசனைக் குழுவை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இதை எதிர்த்து சுப்பிரமணியம் சுவாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இன்று விசாரித்தது.
சுவாமி தான் தாக்கல் செய்திருந்த மனுவில், தனி நீதிபதியின் உத்தரவும், தீர்ப்பும், அரசியல் சட்டத்தின் ஷரத்துக்களுக்கு எதிரானது.
செப்டம்பர் 24ம் தேதியன்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
அரசியல் சட்டத்தின் 161வது பிரிவின் கீழோ அல்லது இந்திய குற்றவியல் சட்டத்தின் 433-ஏ பிரிவின் கீழோ தன்னை விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி கோர முடியாது. அதற்கு அவருக்கு உரிமையும் இல்லை.
நளினி செய்துள்ள குற்றம், அரிதிலும் அரிதான வழக்குகள் என்ற அம்சத்தின் கீழ் வருகிறது. தனி நபர் நலனை விட சமூக நலனே மிகவும் பெரியது. முக்கியமானது.
கற்றறிந்த தனி நீதிபதி, நளினிக்கு சாதகமாக எந்தவித அனுதாபத்தையும் காட்ட முடியாது என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த டிவிஷன் பெஞ்ச், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலம், சுவாமியின் மனு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications