சந்திராயன் வெற்றியைத் தொடர்ந்து சூரிய ஆய்வு விண்கலம்: இஸ்ரோ

இந்தியாவின் முதலாவது நிலவுப் பயணம் சந்திராயன்-1 வெற்றிகரமாகியுள்ளது. முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட விண்கலமான சந்திராயன்-1 நிலவை நெருங்கி விட்டது.
இதையடுத்து சூரியனை ஆய்வு செய்யும் விண்கலம் அனுப்பும் முயற்சிகளை இஸ்ரோ தொடங்கவுள்ளது.
சூரியனின் வெளிப் பகுதியான வெளிப்புறப் பகுதியான கொரானா, அதன் கதிர்வீச்சுகளை ஆதித்யா ஆய்வு செய்யும்.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கூறுகையில், ஆதித்யா ஒரு மினி சாட்டிலைட். இதன் வடிவம் தயாராகி விட்டது. சூரியனிலிருந்து என்ன மாதிரியான கதிர்வீச்சுக்கள் நிகழ்கின்றன என்பதை ஆதித்யா ஆராயும்.
கொரானாவின் காந்தப் புலத்தின் அமைப்பு, சூரியனிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு்க்கள் உள்ளிட்டவை குறித்து இது ஆராயும்.
ஆதித்யாவுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி விட்டது. அதன் டிசைனும் தயாராகி விட்டது. இந்த ஆய்வு சற்று கடினமானது. உலகளவில் மிகச் சில நாடுகள்தான் இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளன என்றார் நாயர்.
ஆதித்யா திட்டத்தை வடிவமைக்கும் பணியில் இஸ்ரோ தலைமை விஞ்ஞானி ஜெயதி தத்தா ஈடுபட்டுள்ளார். சந்திராயனைப் போலவே, ஆதித்யா விண்கலமும் முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படவுள்ளதாக ஜெயதி தத்தா தெரிவித்துள்ளார்.
பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலமே ஆதித்யாவும் விண்ணில் செலுத்தப்படும்.
சூரியன் குறித்த ஆய்வில் அமெரிக்கா, ஜப்பான், கனடா, சீனா ஆகிய நாடுகள் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications