போர் நிறுத்தம் செய்ய இலங்கைக்கு உணர்த்த வேண்டும்: கருணாநிதி
சென்னை: உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கைக்கு உணர்த்த வேண்டும், நிர்ப்பந்திக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இலங்கையில் போர் நிருத்தம் என்பது இரு சாராரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று என நான் குறிப்பிட்டிருந்தேன்.
தாங்கள் போர் நிறுத்தத்திற்கு தயார் என விடுதலைப் புலிகள் சார்பாக நடேன் தற்போது அறிவித்திருக்கிறார். இதற்கிடையே, இந்திய அரசு நினைத்தால் ஒரே நாளில் இலங்கையில் நடக்கும் சண்டையை நிறுத்தி விட முடியும் என ராமதாஸ் கூறியிருக்கிறார். டாக்டர் அதை மட்டும் சொல்லவில்லை.
இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் உட்கார்ந்து பேசி அரசியல் தீர்வு காண்பதற்கு இந்திய அரசு முயற்சிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங் 14.10.2008 அன்று செய்தியாளர்களிடம் வெளியிட்ட கருத்து - இலங்கைப் பிரச்சினைக்கு ராணுவத் தீர்வு காண முடியாது. சமரசப் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண வேண்டும் என்பதாகும்.
22.10.2008 நாடாளுமன்றத்தில், நமது வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வைத்த அறிக்கையிலும், இனப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாகாது என்ற நமது ஆழ்ந்த நம்பிக்கையை நான் இங்கு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.
இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். அது ஒன்றுபட்ட இலங்கையின் சட்டதிட்டத்தின்படி தமிழ்ச் சமுதாயம் உள்ளடக்கிய சிறுபான்மையினரின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் வகையில், இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.
இப்படியொரு பேச்சுவார்த்தை நடைபெறவும், அரசியல் தீர்வு காணவும் இலங்கையில் போர் புரிந்து கொண்டிருக்கின்ற இலங்கை ராணுவம் - விடுதலைப் புலிகள் இரு சாராருமே இணக்கம் தெரிவித்து, போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும்.
அதை வலியுறுத்தித்தான் அக்டோபர் 14ம் தேதியன்று தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானம் படிப்படியாக நடைமுறைக்கு வரக் கூடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக பிரதமரின் கருத்தும், வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்தும் உள்ளன. இனி அந்தக் கருத்தை செயலாக்கத்துக்குக் கொண்டு வர வேண்டியது இலங்கை அரசுக்குரிய தவிர்க்க முடியாத பொறுப்பும் கடமையுமாகும்.
இதனை இந்திய அரசு இலங்கை அரசுக்கு உணர்த்தி செயல்படச் செய்வது அவசர அவசியத் தேவையாகும் என்று முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications