பாலகிருஷ்ணாவின் யுவ கர்ஜனை: புத்துணர்ச்சி பெற்ற தெலுங்கு தேசம்
ஐதராபாத்: நடிகர் பாலகிருஷ்ணாவின் வருகையால் தெலுங்கு தேசம் கட்சி புத்துணர்ச்சி பெற்றுள்ளது.
சமீபத்தில் அரசியல் கட்சி ஆரம்பித்த சிரஞ்சீவியால் தெலுங்கு தேசம் கட்சி சற்று மிரட்சிக்குள்ளாகியிருந்தது.
இந்த நேரத்தில்தான் தெலுங்குதேசம் கட்சியை நிறுவிய என்டி ராமாராவின் மகனும், அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மைத்துனருமான பாலகிருஷ்ணா தனது அரசியல் பிரவேசத்தை மிகப் பிரமாண்ட முறையில் அறிவித்துள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் சமீபத்தில் கூட்டப்பட்ட யுவ கர்ஜனை மாநாட்டில் பாலகிருஷ்ணா தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ளார். இந்தக் கூட்டத்துக்கு திரண்டிருந்த மக்கள் எண்ணிக்கை, சிரஞ்சீவி கட்சி தொடங்கிய போது திருப்பதியில் கூடியதைவிட அதிகம் என வியக்கிறார்கள் ஆந்திர மக்கள்.
பாலகிருஷ்ணாவின் அரசியல் பிரவேசம்தான் இப்போது ஆந்திரா முழுவதும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. தெலுங்கு தேசம் கட்சிக்கே அவர் வருகை புது தெம்பைக் கொடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாலகிருஷ்ணாவின் வருகை நிச்சயம் சிரஞ்சீவி கட்சிக்கு பெரும் நெருக்கடிதான் என்றும், வரும் தேர்தலில் உண்மையான மோதல் பாலகிருஷ்ணாவுக்கு சிரஞ்சீவிக்கும் இடையில்தான் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றன மீடியா வட்டாரங்கள்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications