ரஜினியை வீடு தேடிச் சென்று சந்தித்த அத்வானி

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எல்.கே.அத்வானி இன்று சென்னை வந்தார். அவர் எழுதியுள்ள 'எனது நாடு, எனது வாழ்க்கை' (My country; M life) என்ற தலைப்பில் அவர் எழுதிய சுயசரிதையின் தமிழ் பதிப்பு வெளியீட்டு விழா இன்று நடந்தது.
இந்த விழாவில் பங்கேற்க வேண்டும் என ரஜினிக்கு பாஜக அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் ரஜினி இதுகுறித்து பதில் ஏதும் அளிக்கவில்லை.
இந்த நிலையில் இன்று சென்னை வந்த அத்வானி திடீரென ரஜினிகாந்த்தின் வீட்டுக்குச் சென்றார். அத்வானியை, ரஜினி குடும்பத்தினர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
பின்னர் ரஜினியும், அத்வானியும் சுமார் முக்கால் மணி நேரம் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு குறித்து பாஜக மற்றும் ரஜினி தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இருப்பினும் லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என ரஜினியிடம் அத்வானி கோரியதாக கூறப்படுகிறது.
ரஜினியை வீடு தேடிச் சென்று அத்வானி சந்தித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications