இல.கணேசன், ராம. கோபாலனுக்கு கொலை மிரட்டல்
சென்னை: பாஜக தலைவர் இல.கணேசன் மற்றும் இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம. கோபாலன் ஆகியோருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராம. கோபாலனின் உதவியாளர் ரவிக்குமார் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சேகரிடம் புகார் கொடுத்துள்ளார்.
அதில், 7.11.2008 அன்று தேதியிட்ட ஒரு கடிதம் இந்து முன்னணி அலுவலகத்திற்கு வந்துள்ளது. அதில், இல.கணேசன், ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி சென்னை அலுவலகங்கள் என்று மேல் அட்டையில் முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்தக் கடிதத்தின் உள்ளே 2 கடிதங்கள் உள்ளன. முதல் கடிதத்தில், மயிலாடுதுறை காசி விசுவநாதர் கோவிலுக்கு அருகில் மசூதி கட்டக் கூடாது என இல.கணேசன் அளித்திருந்த பத்திரிக்கைப் பேட்டியின் நகல் இணைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி ஒழிக என எழுதப்பட்டிருந்தது. மேலும், ராம.கோபாலன், இல.கணேசன் மற்றும் பிற இந்து அமைப்புகளின் தலைவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டிருந்தது.
இன்னொரு கடிதத்தில், மாவட்டந்தோறும் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை கொல்வோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே மிரட்டலுக்குள்ளாகியவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ரவிக்குமார் புகாரில் கூறியிருந்தார்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications