பாமக எம்.எல்.ஏ-வின் கைது கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்
நாமக்கல்: கபிலர்மலை தொகுதி பாமக எம்.எல்.ஏ நெடுஞ்செழியனை கைது செய்யக் கோரி விவசாயிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை அருகே தனியாருக்கு சொந்தமான காகித ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த காகித ஆலை கழிவால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி அந்த பகுதி விவசாயிகள் பல கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக கபிலர்மலை தொகுதி பாமக எம்.எல்.ஏ நெடுஞ்செழியன் செயல்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் கபிலர்மலை தொகுதி பாமக எம்.எல்.ஏ நெடுஞ்செழியன் மீது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் -க்கு விவசாயிகள் புகார் மனு அனுப்பினர்.
புகார் அனுப்பி விவசாயிகள் சிலரை எம்எல்ஏ நெடுஞ்செழியன் ஆதரவாளர்கள் தாக்கியதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் காரணமாக கபிலர்மலை தொகுதி பாமக எம்.எல்.ஏ நெடுஞ்செழியன் மீதும், அவரது ஆதரவாளர்கள் சிலர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ஆனால் இந்த விவகாரத்தில் காவல்துறை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி விவசாயிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications