வங்கதேசத்தைப் போல இலங்கையில் இந்தியா தலையிட வேண்டும்: அதிமுக
சென்னை: வங்கதேசத்தில் தலையிட்டு அங்கு அமைதியை ஏற்படுத்தியதைப் போல, இலங்கை விவகாரத்திலும் இந்தியா தலையிட்டு தமிழர்களைக் காக்க வேண்டும், அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று சட்டசபை அதிமுக துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டசபையில் இலங்கை தொடர்பான தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், இலங்கை இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். இலங்கையில் அமைதி ஏற்படுத்தும் கடமையும், பொறுப்பும் இந்தியாவுக்கு உள்ளது.
வங்கதேசத்தில் இந்தியா தலையிட்டு அமைதியை ஏற்படுத்தியது. அதேபோல இலங்கையிலும் தலையிட்டு தமிழர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்.
இலங்கைப் பிரச்சினைக்கு இணக்கமான தீர்வு காண மத்திய அரசை திமுக அரசு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.
போர் நிறுத்தம் முதலில் செய்யப்பட வேண்டும். அதன் பின்னர் இரு தரப்பினரையும் இந்தியாவுக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் அதே சமயத்தில், கச்சத்தீவை மீட்டு, தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும் அவலத்திற்கும் முடிவு கட்ட வேண்டும் என்றார்.
ஜி.கே.மணி
பாமக தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், உலகின் எந்த நாட்டிலும், 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு இனப் பிரச்சினை நீடித்து வருவது இதுவே முதல் முறையாகும்.
நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்கு இலங்கை அரசு சம்மதிக்க வேண்டும். அப்படி அது செய்ய மறுத்தால், இலங்கை மீது இந்தியா பொருளாதார தடையை அறிவித்து நெருக்குதலைக் கொடுக்க வேண்டும் என்றார்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
தமிழக சட்டசபை 18 ஆம் தேதி கூடுகிறது.. “தமிழ்த்தாய் வாழ்த்து” பற்றி சஸ்பென்ஸ் வைத்த சபாநாயகர்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications