புதிய தொழில் முனைவோருக்கு ஆரம்ப முதலீடு தரும் அக்சல்
பெங்களூர்: இந்தியாவில் துவங்கவிருக்கும் புதிய தொழில்களை ஊக்குவிக்க ஆரம்ப மூலதனம் தரும் அக்சல் நிறுவனம், தனது 60 மில்லியன் டாலர் ஆரம்ப முதலீட்டுத் திட்டம் நிறைவு பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவிலேயே முதல்முறையாக, புதிய தொழில்களில் ஆரம்ப முதலீடுகளைச் செய்ய நிதி வழங்கும் நிறுவனம் அக்சல் இந்தியா. அக்சல் குளோபல் பிளாட்பார்மின் ஓர் அங்கம்.
தொழில்நுட்பத் துறை, இணையதள சேவை, மீடியா, நுகர்வோர் பொருள் தயாரிப்பு, மொபைல் போன்கள் உற்பத்தி என பல்வேறு தொழில்களில் புதிதாக களமிறங்குவோருக்கு ஆரம்ப முதலீடு வழங்குவதில் முன்னணி நிறுவனம் அக்சல். தற்போது நிறைவு பெற்றுள்ள 60 மில்லியன் டாலர் திட்டத்தின் மூலம் மேற்கண்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பயனடையும்.
வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் முக்கிய நிறுவனங்கள் இந்தியாவைத் தேடி வர இந்நிறுவனம் பெரிதும் உதவியது.
1983-ல் லண்டன் மற்றும் சீனாவில் கிளைகளுடன் தனது வர்த்தகத்தைத் துவங்கிய அக்சல், இன்று உலகமெங்கும் 30-க்கும் மேற்பட்ட முதல் தர இண்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு ஆரம்ப முபதலீடு அளித்துள்ளது.
காம்ஸ்கோர், ஃபேஸ்புக், ஜேபி, காயாக், மேக்ரோமீடியா, மெட்ரோபிசிஎஸ், வால்மார்ட் டாட்காம், பாலிகாம் போன்றவை அவற்றில் சில.
இந்தியத் தொழில் துறையைப் பொறுத்தவரை ஆரம்ப முதலீடுகள்தான் சவாலான விஷயம். அதை வழங்குவதில் இன்று முன்னணியில் இருப்பது அக்சல் இந்தியாதான். மகேந்திரன் பாலச்சந்திரன், காகன் குமார், சுபத்ரா மித்ரா மற்றும் பிரஷாந்த் பிரகாஷ் ஆகிய நான் பங்குதாரர்களால் நிர்வகிக்கப்படும் இந்நிறுவனம்தான், ஆரம்ப முதலீடுகளுக்கென்றே நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
'அக்சல் குளோபல் நெட்வொர்க்கின் முக்கிய அங்கமாகத் திகழ்கிறது அக்சல் இந்தியா. இந்தியத் தொழில்துறையின் முக்கிய நிறுவனங்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனமாக அக்சல் மாறியிருப்பது நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது' என அக்சல் பார்னர்ஸின் பங்குதாரர் பீட்டர் வாக்னர் தெரிவித்துள்ளார்.
அக்சல் இந்தியா பங்குதாரர், சுபத்ரா மித்ரா கூறுகையில், 'இந்தியாவில் இன்று பல புதிய தொழில் முனைவோரைப் பார்க்க முடிகிறது. எல்லோருமே முதல்முறையாக தொழில் தொடங்குபவர்கள். அதிலும் அவர்களிவல் பெரும்பாலோர் அக்சல் இந்தியா குழுவின் ஒரு அங்கமாக இருப்பதுதான் விசேஷம். அக்சலின் ஆரம்ப முதலீடு அளிப்பு இன்னும் அதிக வேகத்துடன் தொடரும்,' என்றார்.
ஹாலிடே ஐக்யூ, டோவ்டெயில், இன்பியோப்ரோ, காடி ஸோன், கிருஸா, முசிக்மா, பெர்ஃபின்ட், ஸ்கோன்ஸ் அண்ட் விரிடெண்ட் போன்றவை அக்சல் இந்தியாவின் போர்ட்போலியோ நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications