தீ விபத்திலிருந்து மீண்டது இந்தியன் வங்கி-தீ முற்றிலும் அணைப்பு
சென்னை: பெரும் தீவிபத்தில் சிக்கிய சென்னை இந்தியன் வங்கியின் தலைமை அலுவலகம் சகஜ நிலைக்குத் திரும்பியுள்ளது. தீ முற்றிலும் அணைக்கப்பட்டு விட்டது. பணிகள் வழக்கம் போல நடப்பதாக வங்கியின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜாஜி சாலையில் இந்தியன் வங்கியின் தலைமை அலுவலகம் உள்ளது. 7 மாடிகளைக் கொண்ட இந்த கட்டடத்தின் 5வது மாடியில் நேற்று முன்தினம் இரவு பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்புப் படையினர் ராட்சத கிரேன்கள் உள்ளிட்டவற்றுடன் விரைந்து வந்து தீயணைப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அந்த சமயத்தில் மின்சாரம் தடைபட்டிருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 5வது மாடியில் பற்றிய தீ 6வது மாடிக்கும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிட்டத்தட்ட 7 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. நேற்று காலையில்தான் தீயணைக்கும் பணி முடிவுக்கு வந்தது. இந்த பணியின்போது தீயணைப்புப் படை வீரர் மோகன் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
தீயணைப்புப் பணி முடிய 9 மணிக்கு மேல் ஆகி விட்டதால் பணிக்கு வந்த ஊழியர்கள், அவரவர் பகுதிகளில் உள்ள இந்தியன் வங்கிக் கிளைகளில் 2 நாட்களுக்கு 'ரிப்போர்ட்' செய்யமாறு அறிவுறுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர்.
மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
தீவிபத்து குறித்து இந்தியன் வங்கி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சுந்தரராஜன் கூறுகையில், தீ முழுமையாக அணைக்கப்பட்டு விட்டது. வங்கிப் பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. வழக்கம் போல பணிகள் நடந்து வருகின்றன. அனைத்து கிளைகளும், ஏடிஎம் மையங்களும் எந்தவிதப் பிரச்சினையும் இன்றி செயல்பட்டு வருகின்றன.
அலுவலகம் தொடர்பான ஆவணங்கள் மட்டுமே தீயில் கருகி விட்டன. சேத மதிப்பை இனிமேல்தான் கணக்கிட வேண்டும் என்றார்.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications