ராஜபக்சேவுக்கு எதிராக தமிழ் தேச பொதுவுடமைக் கட்சி போராட்டம்
மதுரை: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் தமிழகமெங்கும் நடந்தது.
மதுரையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் இணைந்து நேற்று இப் போராட்டத்தை நடத்தின.
காலை 11 மணிக்கு மதுரை மேலமாசிவீதி - வடக்குமாசி வீதி சந்திப்பில் நடந்த ஆர்ப்பட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி மதுரை நகரச் செயலாளர் இராசு தலைமை தாங்கினார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்க செயற்குழு உறுப்பினர் கருப்பையா முன்னிலை வகித்தார்.
தமிழர் ரத்தம் குடிக்கும் ராஜபக்சே திரும்பிப் போ, இனக்கொலை புரியும் ராஜபக்சே திரும்பிப் போ, கொலைவெறியன் ராஜபக்சேவுடன் இந்திய அரசே கைகுலுக்காதே என்பன போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தஞ்சையில் மாலை 5 மணிக்கு பனகல் கட்டிடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கருப்புக் கொடியேந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை நகரச் செயலாளர் இரா.சு.முனியாண்டி தலைமை தாங்கினார். தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் நா.வைகறை, த.தே.பொ.க. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தெ.காசிநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். திரளான இளைஞர்கள் இதில் கலந்து கொண்டனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications