கள்ள காதலியை பழிவாங்க 2 சிறுவர்கள் கடத்தி கொலை
தஞ்சாவூர்: தன்னுடன் உல்லாசத்திற்கு வர கள்ளக் காதலி மறுத்ததால் ஆத்திரமடைந்த நபர் அவரது இரு குழந்தைகளையும் கடத்திக் கொலை செய்தார்.
தஞ்சை மருத்துவ கல்லூரி ரோடு இந்திரா நகரை சேர்ந்தவர் முருகையன். இவர் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரேவதி (32). இவர்களுக்கு விக்னேஷ் (8), தினேஷ் (6) ஆகிய 2 மகன்கள்.
இரவு வீட்டில் ரேவதி சமைத்துக் கொண்டிருந்தபோது குழந்தைகள் இருவரும் வராண்டாவில் விளையாடிக் கொண்டிருந்தனர். ரேவதி சமைத்து விட்டு வெளியே வந்தபோது மகன்கள் இருவரையும் காணவில்லை.
இதுகுறித்து ரேவதி தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீசில் புகார் செய்தார். புகாரில் சரவணன் என்பவர்தான் தனது மகன்களை கடத்தி இருக்கலாம் எனக் கூறியிருந்தார்.
இந் நிலையில் பட்டுக்கோட்டை அருகே உள்ள வட்டாத்திகோட்டை வாய்க்காலில் ஒரு சிறுவனின் உடல் ஒதுங்கியதாக தகவல் கிடைத்தது. போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அது சிறுவன் விக்னேஷ் எனத் தெரியவந்தது.
இந் நிலையில் இன்று காலை கண்டிதம்பட்டு பாலத்தின் கீழ் இன்னொரு சிறுவன் தினேஷ் பிணம் மிதப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் விரைந்துசென்று உடலை கைப்பற்றினர்.
கள்ளக்காதல்..
இதையடுத்து ரேவதியிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் ரேவதிக்கும், சரவணனுக்கும் நீண்ட காலமாக கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் ரேவதியின் மகன்களுக்கு தங்களது தாயின் கள்ளக்காதல் குறித்து புரிய வந்துள்ளது. இதையடுத்து சரவணனுடனான நட்பை துண்டித்துக் கொண்டார் ரேவதி.
இதனால் ஆத்திரமடைந்தார் சரவணன். தான் அழைத்தும் ரேவதி வர மறுப்பதால், ரேவதியிடம் ஒரு நாள் உன் குழந்தைகளை கடத்தி உன்னை பரிதவிக்க வைப்பேன் என மிரட்டியுள்ளார். எனவே சரவணன்தான் கடத்திக் கொன்றிருக்கலாம் என ரேவதி போலீஸாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து போலீஸார் சரவணனைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications