நெல்லை-தூத்துக்குடி கல்லூரிகளில் போலீஸ் பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
நெல்லை: சென்னை அம்பேத்கார் சட்டக் கல்லூரியில் இரு பிரிவு மாணவர்களுக்கு இடையே மோதல் நடந்ததையடுத்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை சட்டக் கல்லூரி மோதலில் காயமடைந்த 2ம் ஆண்டு மாணவர் அய்யாத்துரை, நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பனவடலிசத்திரம் ஆராய்ச்சிபட்டியை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகனாவார்.
இதனால் நெல்லை மாவட்டத்தில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் சென்னை சம்பவத்தை தொடர்ந்து நெல்லை சட்டக் கல்லூரிக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதே போல தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications