கடலூர், எண்ணூர், திருவொற்றியூரில் வீடுகளில் புகுந்த கடல் நீர்
சென்னை: வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வட தமிழகம் முழுவதும் கடல் கொந்தளிப்பு காணப்படுகிறது. கடலூர், சென்னை எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகளில் கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்தது.
திருவொற்றியூர் மற்றும் எண்ணூர் கடல் பகுதியில் நேற்று இரவு ராட்சத அலைகள் எழுந்தன. கடல் அரிப்பைத் தடுப்பதற்காக போடப்பட்டுள்ள சுவரைத் தாண்டி அலைகள் இந்திராகாந்தி குப்பம், அப்பர் நகர், சின்ன குப்பம், பெரிய குப்பம், நெட்டு குப்பம் ஆகிய பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்தது.
இதையடுத்து எண்ணூர் பெரிய குப்பம் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விசைப் படகுகள் மற்றும் கட்டுமரங்களில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், கடல் கொந்தளிப்பு காரணமாக மீன் பிடிக்கச் செல்லவில்லை.
அதே போல கடலூர் சில்வர் பீச்சில் சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு தண்ணீர் புகுந்து கடலை ஒட்டிய சாலையை அரித்தது.
பெண்ணையாறு, கெடிலம் மற்றும் உப்பனாற்று முகத்துவாரங்களிலும் கடல் நீர் புகுந்தது. இந்த மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.
அதே போல காரைக்காலிலும் தீவிர கடல் கொந்தளிப்பு காணப்பட்டது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications