கட்டாயப்படுத்தி ராணுவத்தில் சேர்க்கப்படும் தமிழர்கள்
ராமேஸ்வரம்: தமிழ் இளைஞர்களை கட்டாயப்படுத்தியும், மிரட்டியும், ராணுவத்தில் சேர்த்து வருவதாக இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் வந்துள்ள தமிழ் அகதிகள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் சண்டை உக்கிரமடைந்து வருவதால் அங்கிருந்து வரும் அகதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட தினசரி அகதிகள் வருகிறார்கள்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு இரவு தலைமன்னாரிலிருந்து பிளாஸ்டிக் படகு மூலம் 11 குடும்பத்தைச் சேர்ந்த 29 பேர் (7 பெண்கள், 11 குழந்தைகள்) அரிச்சல்முனைக்கு வந்தனர்.
நேற்று தனுஷ்கோடி காவல் நிலையத்தில் அவர்கள் அடைக்கலம் புகுந்தனர். கியூ பிரிவு போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர் அனைவரும் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அகதிகள் கூறுகையில், ராணுவத்தின் கெடுபிடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு 103 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை ராணுவத்தினர் சுற்றி வளைத்து ஒரு பள்ளிக்கூடத்திற்குக் கூட்டிச் சென்றனர்.
அங்கு விடுதலைப் புலிகளுடன் உங்களுக்கு தொடர்பு உள்ளதா, அவர்கள் குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும். புலிகளுக்கு உதவுவோர் குறித்து தகவல் தர வேண்டும் என மிரட்டினர்.
மேலும், தமிழ் இளைஞர்களை தனியாகப் பிரித்து அனைவரும் ராணுவத்தில் சேர வேண்டும். இல்லாவிட்டால் சுட்டுக் கொன்று விடுவோம் என மிரட்டினர்.
ராணுவ கெடுபிடி அதிகமாகி வருவதால், உயிருக்குப் பயந்து தப்பி வந்துள்ளோம் என்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications