'புறக்கணிப்பை' புறக்கணித்த காஷ்மீர்-44% வாக்குப்பதிவு

கடும் பனிப்பொழிவு மற்றும் பிரிவினைவாத அமைப்புகளின் தேர்தல் புறக்கணிப்பு அழைப்பு இடையே இந்த தேர்தல் நடைபெறுகிது.
காஷ்மீர் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக கார்கில், பந்திபோரா, பூஞ்ச் மற்றும் லே ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பத்து தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
இந்த தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ், மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 102 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்த தொகுதிகளில் சுமார் 6 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலுக்காக 1038 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்தலை புறக்கணிக்க பிரிவினைவாத அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளதால் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மற்றொரு புறம் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. எனினும் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
பகல் வரை 10 தொகுதிகளையும் சேர்த்து 10 சதவீத வாக்குகள் பதிவாகியின. மாலை 4 மணி வரை 44 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்முறை உள்ளிட்ட அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை. போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எல்லைப் பகுதியில் அமைந்துள்ள குரேஸ் மற்றும் பந்திப்போரா பகுதிகளில் 28 நடமாடும் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
மீதமுள்ள 6 கட்ட தேர்தல் வரும் 23, 30, டிசம்பர் 7, 13, 17 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெறுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications