பூனகரியில் பின்வாங்கியது போர்த் தந்திரம் - 3 மாதங்களில் பெரும் தாக்குதல்: பிரபாகரன்

புலிகளின் தலைமையகம் அமைந்துள்ள கிளிநொச்சியைப் பிடிக்க ராணுவம் தீவிர தாக்குதலில் இறங்கியுள்ளது. பல முனைகளிலிருந்து கிளிநொச்சியை நோக்கி அது முன்னேறி வருகிறது.
கிளிநொச்சி நகருக்கு வெகு அருகில் இருப்பதாக கூறி வரும் ராணுவம் இன்னும் நகருக்குள் நுழைந்தபாடில்லை. இந்த நிலையில் முக்கியப் பகுதியான பூனகரியை ராணுவம் சில நாட்களுக்கு முன்பு பிடித்தது. இது புலிகளுக்குப் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்தப் பின்னணியில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் சேனாதிபதி ராஜா, சந்திரநேரு, ஜெனந்த மூர்த்தி ஆகியோர் வன்னிக்குச் சென்று பிரபாகரனை சந்தித்துப் பேசியுள்ளனர். பூனகரி வீழ்ச்சி குறித்து அவர்கள் பிரபாகரனிடம் விவாதித்துள்ளனர்.
அப்போது அவர்களிடம் பேசிய பிரபாகரன், இது தோல்வி அல்ல. போர் உபாயம்தான். போர்த் தந்திரமாகத்தான் பூனகரிலிருந்து படைகள் விலகியுள்ளன. இன்னும் 3 மாதங்களில் மிகப் பெரிய தாக்குதலைத் தொடுக்கவிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
கடும் சண்டையில் - 20 ராணுவ வீரர்கள் பலி
இதற்கிடையே, வட முனையில் உள்ள முகமலைப் பிராந்தியத்தில் கடும் சண்டை நடந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நடந்த கடும் சண்டையில், காந்தால் என்ற இடத்தில் 20 ராணுவ வீரர்களை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். 80 பேர் படுகாயமடைந்ததாக புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலையில் ஆரம்பித்த சண்டை பிற்பகல் வரை நீடித்துள்ளது. இந்த சண்டையின் விளைவாக அப்பகுதியில் முன்னேறும் முயற்சியை விட்டு விட்டு ராணுவம் பின் வாங்கிச் சென்று விட்டது.
இலங்கை தரைப்படைக்கு ஆதரவாக விமானப்பட விமானங்களும் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால் புலிகளின் கொரில்லாத் தாக்குதலை ராணுவத்தால் சமாளிக்க முடியவில்லை.
கிலாலி, முகமலை, காந்தால், பழாய், இயக்காச்சி, வடமராச்சி கிழக்கு ஆகிய பகுதிகளிலும் கடும் சண்டை நடந்தது.
காயமடைந்த மற்றும் கொல்லப்பட்ட வீரர்களை இலங்கை விமானப்படை வீரர்கள் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் அப்புறப்படுத்தினர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications