சாத்வி பிரஞ்யா, 7 பேரின் காவல் நீட்டிப்பு

மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாத பெண் சாமியார் பிரஞ்யா சிங் தாக்கூர், சிவநாராயணன் கல்சங்கரா, ஷியாம் சாஹு, மேஜர் ரமேஷ் உபாத்யாய், சமீர் குல்கர்னி, அஜய் ரஹீர்கர், ராகேஷ் தவாடே, ஜெகதீஷ் மாத்ரே ஆகியோர் நேற்று நாசிக் நான்காவது சிவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது அவர்களது சிறைக் காவலை நீட்டித்து நீதிபதி காந்தாரா உத்தரவிட்டார்.
அப்போது பிரஞ்யாவின் வக்கீல் கணேஷ் சோவானி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், மும்பை தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியபோது, தனது கட்சிக்காரரை முறையாக நடத்தவில்லை. விசாரணையை ஆங்கிலத்தில் நடத்தியுள்ளனர். எனது கட்சிக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை. எனவே அரசுத் தரப்பில் இந்தியில் ஆவணங்களைப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு மீது பின்னர் தீர்ப்பளிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications