பிரசவத்திற்கு லஞ்சம்-11 மருத்துவ ஊழியர்கள் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் பணம் கொடுத்தால்தான் பிரசவம் பார்க்கின்றனர். இப்படி நோயாளிகளிடம் பணம் கேட்டு தொல்லை செய்த 11 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சென்னை ராயபுரத்தில் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. பெண்கள் நோய் சம்பந்தப்பட்ட அனைத்திற்கும் இங்கு சிகிச்சை அளிக்கப் படுகிறது.

பிரசவம், கர்ப்பபை அகற்றுதல், மார்பு புற்றுநோய், போன்ற பெண்களுக்கான நோய் களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுவதால் வட சென்னை பகுதி மட்டு மின்றிபிற மாவட்டங்களில் இருந்தும் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

இங்கு தினமும் 30 முதல் 50 பிரசவம் வரை நடக்கிறது வருடத்திற்கு 8000 குழந்தைகள் பிறக்கின்றன.

கூலி தொழிலாளர்கள், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்கள் பிரசவத்திற்காக இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செல்கிறார் கள்.

ஏழைகளுக்கு இலவச பிரசவம் பார்க்கவும், சிகிச்சை அளிக்கவும் அரசு பல ஆயிரம் கோடி செலவு செய்து வருகிறது.

ஆனால் ஆஸ்பத்திரியில் கடைநிலை ஊழியர்கள் பலர் நோயாளிகளிடம் லஞ்சம் கொடுத்தால்தான் பிரசவம் பார்ப்பதாகவும், சிகிச்சை அளிப்பதாகவும் நிறைய புகார்கள் வந்தன.

குறிப்பாக பிரசவ வார்டில் உள்ள ஆயாக்கள் பெண்களிடம் குழந்தை பிறப்பதற்கு முன்பு தொடங்கி பிறந்து சிகிச்சை பெற்று வெளியே செல்லும் வரை பணம் கேட்டு தொந்தரவு செய்கிறார்கள்.

பிரசவமாகும் பெண் களுக்கு ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்று பார்த்து உறவினர்களிடம் சொல்வதற்கு எல்லா அரசு ஆஸ்பத்திரிகளிலும் தனி கட்டணம் நிர்ணயித்து உள்ளார்கள்.

ஆண்குழந்தை என்றால் ரூ.500 முதல் ரூ.1000 வரை லஞ்சம் கொடுக்கவேண்டும் பெண்குழந்தையாக இருந்தால் ரூ.500 வரை வசூலிப்பது உண்டு.

இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு பணத்திற்கு ஆசைப்பட்ட ஒரு ஆயா, பெண் குழந்தையை ஆண் குழந்தை என்று மாற்றிச் சொல்லி கூடுதல் பணத்தைப் பெற்று பெரும் குழப்பமாகி, டி.என்.ஏ., சோதனை வரை அந்த பிரச்சினை போனது நினைவிருக்கலாம்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நோயாளிகள் சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்திடம் புகார் தெரி வித்தனர்.

அவர் உடனடியாக சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

இதையடுத்து மருத்துவமனை கண்காணி்பாளர் மோகனம்பாள் லஞ்சம் வாங்கிய 11 ஊழியர்களை கூண்டோடு சஸ்பெண்டு செய்தார்.

அறுவை சிகிச்சை வார்டில் உள்ள 7 ஆண் ஊழியர்களும், பிரசவ வார்டில் உள்ள 4 ஆயாக்களும் உடனடி யாக சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

இதுபற்றி மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் விநாயகம் கூறுகையில், நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கியதாக 11 பேர் ஊழியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். இதுபற்றி கூடுதல் செய லாளர் அபூர்வா விசாரணை நடத்துகிறார்.

அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறலஞ்சம் கேட்கும் ஊழியர்கள் பற்றி நோயாளிகள் புகார் தெரிவிக்கமுன்வர வேண்டும். பயப்படாமல் தையரியமாக புகார் கொடுத்தால்தான் நட வடிக்கை எடுக்க முடியும்.

ஆஸ்பத்திரிகளில் ஆர். எம்.ஓ. சூப்பிரண்டு போன்ற அதிகாரிகளிடம் லஞ்சம் கேட்பது குறித்து புகார் கொடுக்கலாம். அல்லது புகார் பெட்டியில் எழுதி போட்டால் போதுமானது.

லஞ்சம் கொடுக்க வில்லை என்றால் பிரசவம் சரியாக பார்க்க மாட்டார்கள், தங்களுக்கு ஆபத்து ஏற்படும் ஊழியர்கள் ஏதாவது செய்து விடுவார்கள் என்று பலர் பயப்படுகிறார்கள். அது தவறு. தையரியமாக புகார் கொடுக்க முன்வர வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+