சட்டக் கல்லூரி மாணவர் தீக்குளிக்க முயற்சி!
சென்னை: சட்டக் கல்லூரி கலவரம் தொடர்பாக போலீசார் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி 3ம் ஆண்டு மாணவர் ஒருவர் நேற்று மாலை, அரசு பொது மருத்துவமனை முன்பு தீக்குளிக்க முயன்றார்.
அவர் பெயர் ஜேம்ஸ். உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்கத் தயாராக இருந்த அவரை, போலீசார் கைது செய்தனர்.
எஸ்எம்எஸ் மிரட்டல்:
மேலும் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவர் அய்யாதுரை செல்போனுக்கு நேற்று வந்த ஒரு எஸ்.எம்.எஸ்சில், 'கல்லூரிக்கு வந்தால் கொலை செய்து விடுவோம், திருநெல்வேலிக்கு ஓடிப் போய்விடு' என்று மிரட்டல் விடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் கொதிப்படைந்தனர். மிரட்டல் பற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விசாரித்ததில், கயத்தாற்றைச் சேர்ந்த 4ம் ஆண்டு மாணவர் முத்துராமலிங்கத்தின் செல்போனிலிருந்துதான் இந்த மிரட்டல் வந்தது தெரிய வந்தது. சென்னையில் இருந்த முத்துராமலிங்கத்தை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
'எனது செல்போனை மாணவர் நாகராஜ் வாங்கி எஸ்எம்எஸ் கொடுத்தார். ஆனால் என்ன மெசேஜ் கொடுத்தார் என தெரியாது' என்று முத்துராமலிங்கம் கூறினார். எஸ்எம்ஸ் மிரட்டல் விடுத்த மாணவர் நாகராஜை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications