பிளஸ் ஒன் மாணவியை கர்ப்பமாக்கிய கொத்தனார் !

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பிளஸ் ஒன் படிக்கும் மாணவியை கடத்தி கர்ப்பமாக்கிய கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ளது உசிலம்பட்டி ஒத்தங்களம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி மொக்கராஜு. இவரது மகள் மீனாட்சி. இவர் மணப்பாறையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வருகிறார்.

மீனாட்சி, பள்ளிக்கு செல்லும் வழியில் சுந்தராஜ் என்ற கொத்தனாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதுவே பெற்றோர்களுக்கு தெரியாமல் நாளடைவில் குடும்பம் நடத்தும் அளவிற்கு சென்றுள்ளது.

இதை அறிந்த பெற்றார்கள் மகளைக் கண்டித்துள்ளனர். ஆனால் மீனாட்சி கொத்தனாருடன் உள்ள தொடர்பை துண்டிக்கவில்லை.

இந்த நிலையில் மீனாட்சி காணாமல் போனார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அவரது பெற்றோர்கள் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் போரில் போலீசார் இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர். இதில் அவர்கள் இருவரும் பொத்தமேட்டுப்பட்டியில் இருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று தொத்தனாரிடம் இருந்த மீனாவை மீட்டனர். அப்போது மீனாட்சி கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து கொத்தனார் சுந்தராஜனை போலீசார் கைது செய்தனர்.

பிளஸ் ஒன் மாணவியுடன் குடித்தனம் நடத்தி வந்த கொத்தனார் சுந்தராஜன் ஏற்கனவே இரு முறை திருமணம் ஆனவர். ஆனால் அவரது இரு மனைவிகளும் அவரை விட்டு பிரிந்து விட்டனர் என்பதும் குறிப்பிடதக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+