டயர் விற்பனை சரிந்தது: டன்லப் ஆலை உற்பத்தி நிறுத்தம்
சென்னை: விற்பனை சரிவு மற்றும் நஷ்டம் காரணமாக நாட்டின் பிரபல டயர் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டன்லப் தனது அம்பத்தூர் மற்றும் கொல்கத்தா தொழிற்சாலைகளில் உற்பத்தியை காலவரையின்றி நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
சர்வதேச பொருளாதார மந்தம் பல்வேறு நிறுவனங்களைப் பாதித்து வருகிறது. குறிப்பாக கார் விற்பனை கடந்த சில மாதங்களில் கணிசமாக்க் குறைந்துவிட்டது. இதனால் டயர் விற்பனையும் 25 சதவீதம் வரை குறைந்துவிட்டது. இதனால் தற்காலிகமாக உற்பத்தியை நிறுத்த முடிவு செய்யப்பட்டதாக டன்லப் நிர்வாகம்.
இதை நேற்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது டன்லப்.
முன்னதாக, சிஐடியு தொழிற்சங்கத்துடன் ஞாயிற்றுக்கிழமை விரிவான பேச்சு நடத்தியது டன்லப் நிர்வாகம். அதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து உற்பத்தி நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை முதல் ஊழியர்கள் யாரும் வேலைக்கு வர வேண்டாம் என்று தொழிலாளர்களுக்கு நிர்வாகம் தகவல் கொடுத்துவிட்டது. இதனால், சென்னையில் கிட்டத்தட்ட 1000 தொழிலாளர்கள் வேலை இழப்புக்கு ஆளாகியுள்ளனர். கொல்கத்தா ஆலையில் 1,171 ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுபற்றி டன்லப் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதாவது:
கடந்த சில மாதங்களாக வாகன விற்பனை சரிந்து வருகிறது. எனவே, தேவைக் குறைவைக் கருதி டாடா மோட்டார்ஸ், மகிந்திரா உட்பட பல நிறுவனங்கள் கார், வர்த்தக வாகன உற்பத்தியைக் குறைத்தும், நிறுத்தியும் வருகின்றன. டயர் விற்பனை 25 சதவீதம் சரிந்து விட்டது. எனவே, தற்காலிக உற்பத்தி நிறுத்தம் தவிர்க்க முடியாததாகி உள்ளது.
எனினும், ஆலை மூடப்படாது. தொழிலாளர்கள் வேலையைப் பறிக்கும் பேச்சுக்கே இடமில்லை. உற்பத்தி நிறுத்தம் அமலில் உள்ள காலத்தில் கொல்கத்தா ஆலைத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.2,000 ஆதரவுத் தொகையும், அம்பத்தூர் தொழிலாளர்களுக்கு ரூ.1,500ம் நிர்வாகம் வழங்கும் என்றார் அவர்.
சென்னை, அம்பத்தூரில் ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை டன்லப் டயர் உற்பத்தி தொழிற்சாலை மூடப்பட்டு கிடந்தது. அதை பவன் குமார் ரூயா தலைமையிலான புதிய நிர்வாகம் கையகப்படுத்தி, உற்பத்தியைத் தொடங்கியது.
எனினும், தினமும் 90 டன் உற்பத்தித் திறன் கொண்ட ஆலையில் பாதியளவு மட்டுமே உற்பத்தி நடந்து வந்தது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருந்தாலும் கடந்த 5 ஆண்டுகளாக டன்லப் பங்குகள் மீது வர்த்தகம் நடக்காதது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications