இன்டெல் நிறுவனத்தின் புதிய பிராசஸர்
மும்பை: இன்டெல் நிறுவனத்தின் புதிய, நவீன டெஸ்க் டாப் பிராசஸர், இன்டெல் கோர் ஐ7 மும்பையில் வெளியிடப்பட்டது.
நெஹேலம் பிராசஸர் வரிசையில் வெளியாகும் முதல் பிராசஸர் இது என்பது குறிப்பிடத்தக்கது. இன்டெல் நிறுவனத்தின் பிராசஸர்களிலேயே மிகவும் நவீனமானது, அதிக வசதிகளைக் கொண்ட பிராசஸர் இதுதான்.
புதிய பிரசாஸரை அறிமுகப்படுத்தி பேசிய இன்டெல் ஐ7 விற்பனை மார்க்கெட்டிங் குழு இயக்குநர் ராஜேஷ் குப்தா கூறுகையில், வீடியோ எடிட்டிங், விளையாட்டு, மற்றும் பிற இன்டர்நெட் செயல்பாடுகள், கம்ப்யூட்டர் செயல்பாடுகளை இந்த பிரசாஸர் விரைவுபடுத்தும்.
மின்சாரத்தை அதிகம் உறிஞ்சாமல் கூடுதல் வேலையை இது செய்வது முக்கியமானது.
இன்டெல்லின் ஹைபர் திரெடிங் தொழில்நுட்பத்துடன் கூடியது புதிய ஐ7 பிராசஸர். ஒரே நேரத்தில் பலவிதமான வேலைகளை செய்யக் கூடிய திறனும் இந்த பிராசஸருக்கு உண்டு என்றார் அவர்..












Click it and Unblock the Notifications