பள்ளியில் மாணவர்கள் மோதல்-மண்டை உடைப்பு
நெல்லை: நெல்லையில் பள்ளிக்கூட மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு மாணவரின் மண்டை உடைந்தது.
நெல்லை டவுன் வயல் தெருவை சேர்ந்த லட்சுமணன் மகன் ஸ்ரீதர். டவுனில் உள்ள சேப்டர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். அதே பள்ளியில் அழகனேரியை சேர்ந்த குணசீலன் மகன் விக்னேஷ் பிளஸ் 1 படித்து வருகிறார்.
கடந்த 10ம் தேதி பள்ளியில் இவர்கள் பாத்ரூம் சென்று விட்டு வரும்போது ஒருவருக்கொருவர் தெரியாமல் இடித்து விட்டனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. மேலும் இது குறித்து தலைமை ஆசிரியரிடமும் புகார் செய்யப்பட்டது.
அவர் இரு மாணவர்களையும் அழைத்து எச்சரிக்கை செய்து இனிமேல் இதுபோன்று தகராறு செய்ய மாட்டோம் என்று எழுதி வாங்கினார்.
இந்நிலையில் நேற்று இரு மாணவர்களும் மாடியில் உள்ள வகுப்பறையை விட்டு வெளியே வரும்போது ஒருவரை ஒருவர் முறைத்துப் பார்த்தனர். அப்போது ஸ்ரீதர் ஏன் முறைக்கிறாய் என்று விக்னேஷிடம் கேட்டார்.
அதில் ஆத்திரமடைந்த அவர் வகுப்பறை கதவில் உள்ள இரும்பு தாழ்ப்பாளை பிடுங்கி ஸ்ரீதரின் தலையில் அடித்தார். இதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
இதையடுத்து ஸ்ரீதர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து ஜங்ஷன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரு மாணவர்களும் இரு வேறு பிரிவினர் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications