கிழக்கு மாகாணத்திலிருந்து 42 சிங்கள டாக்டர்கள் ஓட்டம்
கொழும்பு: கிழக்கு மாகாணத்தில் பணியாற்றி வந்த சிங்கள டாக்டர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பணியாற்றி வந்த 42 சிங்கள டாக்டர்கள் வெளியேறி விட்டனர்.
இதுகுறித்து கருணா தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆசாத் மெளலானா கூறுகையில், கிழக்கு மாகாணத்தில் மருத்துவ சேவையை சீர்குலைக்க விடுதலைப் புலிகள் முயலுகின்றனர். இதன் மூலம் தமிழரை முதல்வராகக் கொண்டு இயங்கும் இந்த அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதன் விளைவுதான் சிங்கள டாக்டர் சுட்டுக் கொல்லப்பட்டது. சிங்கள டாக்டர்கள் கிழக்கிலிருந்து வெளியேறியிருப்பது மிகப் பெரிய இழப்பாகும் என்றார்.
சிங்கள டாக்டர்கள் வெளியேறி விட்டதால் கிழக்கில் மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாம்.
இந்த நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பணியாற்றி வரும் அனைத்து சிங்கள டாக்டர்களையும் உடனடியாக அங்கிருந்து மாற்றுமாறு ஜனதா விமுக்தி பெரமுனா கோரிக்கை விடுத்துள்ளது. அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் அது கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications