கடைசித் தமிழன் இருக்கும் வரை ராஜபக்சே கனவு நிறைவேறாது - தா.பாண்டியன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: உலகின் கடைசித் தமிழன் உயிரோடு இருக்கும் வரை ராஜபக்சேவின் கனவு நி்றைவேறாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று நடந்த மதிமுக உண்ணாவிரதத்தை தா.பாண்டியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், இலங்கை பிரச்சினையில் ஒட்டு மொத்த தமிழர்களும் குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.
இலங்கை தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள கடைசி தமிழன் இருக்கும் வரை ராஜபக்சேயின் கனவு நிறைவேறாது.
வருகிற 25-ந்தேதி நடைபெறும் மறியல் போராட்டத்துக்கு பிறகு போர் நிறுத்தப்படா விட்டால் அடுத்த கட்ட போராட்டம் பற்றி அனை வரும் பேசி முடிவு செய் வோம் என்றார்.












Click it and Unblock the Notifications